ஃபேஸ்புக்கில் சோனியாவை சூனியக்காரி என்று விமர்சித்த பாஜக தலைவர்!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சூனியக்காரி என்று ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் பாஜக இளைஞர் அணி தலைவர் அனுராக் தாகூர்.
பாஜக இளைஞர் அணி தலைவர் அனுராக் தாகூர் ஃபேஸ்புக்கில் கூறியதாக இந்தியா டுடே செய்தியில் கூறியிருப்பதாவது,
இந்தியாவுக்கும் பாரத்ததிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இந்தியாவில் தி டர்ட்டி பிக்சர் படத்திற்கு தேசிய விருது அளிப்பார்கள். இந்தியாவில் மகேஷ் பட் தனது மகளிடம் செக்ஸ் பற்றி பேசுவார். இந்தியாவில் தான் ஷெர்லின் சோப்ரா பிளேபாய் பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துவிட்டு இந்நேரம் என் தந்தை உயிருடன் இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பார் என்பார். இந்தியாவில் தான் வெளிநாட்டு ஆபாசப்பட நடிகையின் பிறந்தநாளை ஊடகங்கள் கொண்டாடும். இந்தியாவில் பூனம் பாண்டே போன்றோர் நிர்வாணமாவதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவார்கள்.
இந்தியாவில் தான் பெரிய தலைவர்கள் ஒரு சூனியக்காரி ஆட்டி வைக்கும் பொம்மைகளாக இருப்பார்கள். (அவர் சூனியக்காரி என்று சொல்லி இருப்பது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை.). இவ்வாறு செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து தாகூர் கூறுகையில்,
நான் அப்படி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது குறித்து செய்தி வெளியிட்டவர்கள் என்னிடம் இது போலி அகௌண்டா என்று கூட கேட்கவில்லை. நான் எந்த பெண்ணைப் பற்றியும், தனி நபரைப் பற்றியும் விமர்சிக்கவில்லை. இது பொய். எனது ஃபேஸ்புக் பக்கத்தில் அப்படி எந்த கருத்தும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications