2வது முறையாக அமெரிக்க அதிபராக 2 தடவை பதவியேற்கும் ஒபாமா
வாஷிங்டன்: இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பாரக் ஒபாமா வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இரண்டு முறை பதவியேற்கிறார்.
அமெரிக்க அதிபராக உள்ள பாரக் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் நடந்த தேர்தலில் அவர் மீண்டும் அதிபராகத் தேர்வானார். துணை அதிபராக ஜோ பிடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட மிட் ராம்னி தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில் ஒபாமாவும், பிடனும் வரும் 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக் கொள்கின்றனர். ஜனவரி 20ம் தேதியன்றுதான் அமெரிக்க அதிபர்கள் பாரம்பரியமாக பதவியேற்றுக் கொள்வார்கள் என்பதால் அன்றைய தினம் ஒபாமா பதவியேற்கிறார்.
ஆனால் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று நீதிமன்றங்கள் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மூடப்பட்டிருக்கும். எனவே மறுநாளான 21ம் தேதி அவர்கள் இருவரும் இன்னொரு முறை பதவியேற்றுக் கொள்கின்றனர்.
ஒபாமா முதன்முதலாக அதிபராக பதவியேற்றபோது அவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்த அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தான் தற்போதும் அவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைக்கிறார். பிடனுக்கு துணை நீதிபதி சோனியா சோடோமேயர் பதவிப்பிரமானம் செய்து வைக்கிறார்.
பதவிப்பிரமானம் செய்து வைக்கும் நான்காவது பெண் சோனியா என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications