For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரபணுத்தந்தை ஜீவனாம்சம் தரவேண்டும்… விந்துதானம் செய்தவரிடம் மல்லுக்கட்டும் லெஸ்பியன் ஜோடி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Lesbian
மிசோரி: அமெரிக்காவில் விந்துதானம் கொடுத்த நபரிடம் குழந்தைக்கான ஜீவனாம்சம் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் ஒரு லெஸ்பியன் தம்பதியர்.

மிசோரி மாநிலத்தில் உள்ள கன்சாஸ் சிட்டி வசித்துவரும் லெஸ்பியன் தம்பதியர் ஜெனிபர் ஸ்கிரெய்னர் மற்றும் ஏஞ்செலா பவர். இவர்கள் ஒரு குழந்தையை பெற்று வளர்க்கவேண்டும் என்று நீண்டநாட்களாக ஆசைப்பட்டனர். இதற்காக ஒரு ஆணின் விந்தினை தானமாகப் பெற்று, செயற்கை முறை கருதரிப்புக்கு ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து இவர்களுக்கு விந்துதானம் செய்ய வில்லியம் மரோட்டா (46) என்பவர் முன்வந்தார். லெஸ்பியன் தம்பதியரிடம் ‘இந்த விந்துதானத்தின் மூலம் பிறக்கப்போகும் குழந்தைக்கு தன்னை தந்தையாக குறிப்பிடக்கூடாது. அந்தக் குழந்தையின் பராமரிப்புக்கு தன்னிடம் பணம் கேட்க கூடாது' என்ற நிபந்தனைப் படிவத்தில் கையொப்பம் பெற்றபின் மரோட்டா விந்துதானம் செய்தார்.அவரது விந்தின் மூலம் ஸ்கிரெய்னர் அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.

தற்போது அந்த குழந்தைக்கு 3 வயது ஆகின்றது. இந்நிலையில் தனது குழந்தையின் மரபணுவழி தந்தையான மரோட்டா, குழந்தையின் பராமரிப்புக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஸ்கிரெய்னர் வழக்கு தொடுத்துள்ளார்.

வழக்கமாக, இதுபோன்ற நிகழ்வுகளில் விந்துதானம் செய்யும் நபர், செயற்கை கருத்தறித்தல் சிகிச்சையில் பதவிபெற்ற மருத்துவர் மூலமாகதான் செய்ய வேண்டும் என்பது அமெரிக்க அரசின் சட்டமாகும். ஆனால், பத்திரிகைகளில் வில்லியம் மரோட்டா அளித்திருந்த வரி விளம்பரத்தை பார்த்த ஸ்கிரெய்னர், இந்த ‘டீலிங்'கை தனிப்பட்ட முறையில் செய்துக் கொண்டதாக தெரிகின்றது.

அது மட்டுமின்றி விந்துதானத்தின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு மரபணு தந்தை, எவ்வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சூழலில் ஒரு லெஸ்பியன் ஜோடி குழந்தைக்கு ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்திருப்பது, விந்துதானம் அளிக்க முன்வரும் ஆண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A man who donated his sperm to a lesbian couple 3 years ago to father a child for them has had a claim filed against him by the Kansas Department for Children and Families to pay child support.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X