சிபுசோரன் ஆதரவு வாபஸ்.. ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார் ஜார்க்கண்ட் பாஜக முதல்வர்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் முதல்வர் அர்ஜூன் முண்டா கடிதம் கொடுத்துள்ளார். சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்துவதான் ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதாவும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் இணைந்து 28 மாதங்களாக ஆட்சியை நடத்தி வருகின்றன. துணை முதல்வராக முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரனின் மகன் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார்.
இரண்டு கட்சிகளுக்கும் 18 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்களிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று முக்தி மோர்ச்சா வலியுறுத்தி வந்தது. ஆனால் இதை பாஜக நிராகரித்தது. இதைத் தொடர்ந்து அர்ஜூன் முன்டாவை முதல்வர் பதவியிலிருந்து மாற்றவும் சிபுசோரன் வலியுறுத்திப் பார்த்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இதைத் தொடர்ந்து அர்ஜூன் முன்டா அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக முக்தி மோர்ச்சாவால் நேற்று அறிவிக்கப்பட்டது. இன்று காலை ஆளுநரிடம் ஆதரவு வாபஸ் கடிதம் கொடுக்கப்படும் என்றும் அக்கட்சி அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை அமைச்சரவைக் கூட்டத்தை அர்ஜூன் முன்டா கூட்டினார். இதில் பாஜக, ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாநில சட்டசபையைக் கலைக்க ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்தது.
பின்னர் ஆளுநரை நேரில் சந்தித்த அர்ஜூன் முன்டா தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் முன்டா, மாநிலத்தில் சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்துவது மட்டுமே ஒரே வழி என்று கூறியுள்ளார்.
இதனிடையே 23 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைப்பது குறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று அறிவித்துள்ளது.
இதனால் ஆட்சிக் கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமையுமா? அல்லது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து புதிய அரசை அமைக்குமா? என்ற பரபரப்பான சூழல் ஜார்க்கண்ட்டில் நிலவி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications