பட்ஜெட் தொடருக்கு முன்பு 3-வது அணி உதயம்: சீதாராம் யெச்சூரி
தன்பாத்: காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக 3-வது அணி விரைவில் உருவாகும் என்று மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி, லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காது. இந்த கட்சிகளுக்கு மாற்றாக விரைவில் 3-வது அணி உருவாகும். இதில் சமாஜ்வாடி கட்சி முக்கிய அங்கம் வகிக்கும். வருகிற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே 3-வது அணி உருவாகி விடும்.
3-வது அணி சார்பில் மும்பை, கன்னியாகுமரி, அமிர்தசரஸ், கொல்கத்தா ஆகிய நகரங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக டெல்லி ராமலீலா மைதானத்தில் மார்ச் மாதம் 19-ந் தேதி கூட்டம் ஒன்று நடத்தப்படும்.
கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. ஆனால் இந்த விவகாரத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சி எங்கள் பக்கம் இருக்கிறது. இதனால்தான் 2 கட்சிகளும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகின்றன என்று விமர்சிக்கிறோம் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications