அரையாண்டுத் தேர்வில் மார்க் குறைந்ததால் 2 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை
சேலம்: சேலத்தில் அரையாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கிழக்கு ராஜாபாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் கார்த்திகா(14). கெங்கவல்லி நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகள் பாரதி(13). கார்த்திகா படித்த பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். கார்த்திகாவும், பாரதியும் தோழிகள்.
இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தோழிகள் இருவரும் விளையாடச் சென்றனர். ஆனால் இருட்டியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் பின்புறத்தில் கார்த்திகா பிணமாகவும், பாரதி வாயில் நுரை தள்ளி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பாரதியை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
அரையாண்டுத் தேர்வில் அவர்கள் இருவரும் குறைவான மதிப்பெண்கள் வாங்கியதால் தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications