காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு - அரசிதழில் வெளியாகாமல் தடுத்தது நானா?: கருணாநிதி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகாமல் தாம் தடுத்ததாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் குற்றம்சாட்டியிருப்பதை திமுக தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் கேள்வி- பதில் வடிவிலான அறிக்கை விவரம்:

கேள்வி : காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளி ஆகாததற்கு நீங்கள்தான் காரணம் என்று தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் குற்றம் சாட்டியிருக்கிறாரே?

கருணாநிதி: அவர் உண்மை தெரியாமல் ஏதோ உளறியிருக்கிறார்.உச்சநீதி மன்றத்தில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருந்தகாரணத்தால், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போதும் மத்திய அரசின் சார்பில் அரசிதழில் வெளியிடாததற்கு இதைத்தான் காரணமாகசொல்லுகிறார்கள்.

உச்சநீதிமன்ற வழக்கும் உத்தரவும்

இருந்தாலும், காவிரி நதி நீரை கர்நாடகம் தமிழகத்திற்குத் திறந்து விடுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசு கோரிக்கை இதற்காக வைக்காத நிலையில் - தாங்களாகவே முன் வந்து, "காவிரிநடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு எப்போது மத்திய அரசிதழில் வெளியிடப்படும்? என்ற வினாவினை எழுப்பியதோடு, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு 5-12-2012 அன்றுமத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரை கேட்டுக் கொண்டார்கள். உச்ச நீதி மன்றமேஇறுதித் தீர்ப்பு பற்றி கேள்வி எழுப்பிய நிலையில்தான், 7-12-2012 அன்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய நீர் வள அமைச்சகச் செயலாளர் தெரிவித்தார். அந்தக் கூட்டத்தின் நடவடிக்கைகளைத்தான் உச்ச நீதிமன்றம் தனது 10-12-2012 நாளைய ஆணையில் பதிவு செய்து கொண்டது. ஆனால் மத்திய அரசின் செயலாளர் தெரிவித்ததைப் போல மத்திய அரசிதழில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளி வரவில்லை. அதைப்பற்றி உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்ட போது, கர்நாடக மாநில அரசின் சார்பில் அரசிதழில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை வெளியிடக் கூடாது என்றுதெரிவித்ததால், மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தினை மத்திய அரசு கேட்டிருப்பதாகவும், அதன் பரிந்துரை வந்த பிறகு, முடிவெடுக்க நான்கு வாரங்கள் அவகாசம் தேவை என்றும் கூறினார். இதன் பின்னர் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது குறித்த மத்திய அரசின் முடிவினை ஜனவரி 31-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், ஜனவரி 11-ந் தேதிக்குள்கண்காணிப்புக் குழு கூடவேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறார்கள். வழக்கு பிப்ரவரி 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நான் முட்டுக்கட்டை போட்டேன்என்று தமிழக அமைச்சர் பேசுகிறார் என்றால் அது எவ்வளவு புரியாத்தனமான பேச்சு?

அண்ணா வளைவு

கேள்வி : அண்ணா வளைவினை கடைசியாகத் திறந்து விட்டார்கள் போல்இருக்கிறதே; தேவையில்லாமல் தற்போது அதற்காகச் செலவழிக்கப்பட்ட அரசுப் பணம்எவ்வளவு?

கருணாநிதி: சென்னை அண்ணா நகரிலே உள்ள அண்ணா வளைவினை அகற்றுவதற்கானமுடிவினை தன்னைக் கேட்காமலே எடுத்ததாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார்.அண்ணா வளைவினை அகற்றுவது என்ற முக்கியமான முடிவினை முதல் அமைச்சரின் ஆணையில்லாமல் எடுத்தது யார் என்றும், அவர்கள் எப்படி அந்த முடிவினை எடுத்தார்கள் என்றும் நான்கேட்டிருந்தேன். அதற்கு எந்தப் பதிலும் அரசுத் தரப்பிடமிருந்து இதுவரை வரவில்லை. முதலமைச்சரை யாரும் கேட்காமல் அண்ணா வளைவினை அகற்றத் துணிந்தார்கள் என்றால், குறைந்தபட்சம், அந்தத் துறையின் அமைச்சரையாவது கேட்டிருக்க வேண்டுமே, அந்த அமைச்சர் முதல் அமைச்சருக்குத் தெரிவிக்கவில்லையா என்று நான் கேட்டதற்கும் பதில் இல்லை. அவ்வாறு யாரும் தெரிவிக்காவிட்டாலும், அண்ணா வளை வினை அகற்றுவதற்கு முன்பாகவே, ஏடுகளில்எல்லாம் செப்டம்பர் 1-ந் தேதியன்று அண்ணா வளைவு அகற்றப்படவுள்ளது என்று இரண்டுமூன்று நாட்கள் தொடர்ந்து செய்தி வந்ததே, அந்தச் செய்தியைப் படித்தவுடன் முதலமைச்சர் ஜெயலலிதா, உடனடியாக அதனை அகற்றக் கூடாது என்ற உத்தரவினைப் பிறப்பித்திருந்தால், அகற்றும் பணி தொடங்கப்பட்டிருக்காதே, அதை ஏன் முதலமைச்சர், முன்பாகவே அறிந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நான் கேட்டிருந்தேன். அதற்கும் இன்று வரை பதில் இல்லை. குறிப்பாக எப்படியோ அண்ணா வளைவுகள் தற்போது சீரமைக்கப்பட்டு 4-1-2013 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

1986ஆம் ஆண்டு இந்த அண்ணா பவள விழா நினைவு வளைவுகள் 7.47 லட்சம் ரூபாய்செலவிலே அமைக்கப்பட்டது.அந்த வளைவு களை எட்டு லட்சம் ரூபாய் செலவில் அகற்ற முதல் அமைச்சருக்குத் தெரியாமல் இந்த முடிவுஎடுக்கப்பட்டிருந்தால், அந்த முடிவினை எடுத்தவர் யார், அவருக்கு என்ன தண்டனை, என்பதைஉலகத்திற்கும் மக்களுக்கும் இந்த அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+