திருத்தம்... கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் கிடையாது, கூட்டம் மட்டும்தான்-கருணாநிதி
சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையைக் காக்கக் கோரி ஜனவரி 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டு பொதுக் கூட்டம் மட்டும் நடைபெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையைக் காக்கக் கோரி திமுக சார்பில் அறப் போர் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் சிலையைப் பராமரிப்பதற்கு டெண்டர் கோரி, 9.1.2013ம் தேதியிட்ட நாளிதழ்களில் டெண்டர் விளம்பரம் வந்துள்ளது. எனவே, கழகம் நடத்தத் தீர்மானித்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாக அரசே திருவள்ளுவர் சிலையை பராமரிக்க எண்ணியுள்ளது.
இருந்தாலும், வருங்காலத்தில் இது போன்று நடக்கக் கூடாது என்பதால், திமுக சார்பில் அதே நாளில் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications