'துரை'ங்கல்லாம் வர்றாங்க.. வேகம் வேகமாக இங்கிலீஷ் கற்கும் பிரேசில் விபச்சார அழகிகள்
சாவோபாலோ: பிரேசில் நாட்டில் 2014ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளதால், வெளிநாட்டிலிருந்து வரும் ரசிகர்களை வசீகரிக்கும், வலை விரிக்க வசதியாகவும், பிரேசில் நாட்டு விபச்சார அழகிகள் படு வேகமாக ஆங்கிலம் கற்க தயாராகி வருகிறார்களாம்.
2014ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒட்டுமொத்த பிரேசிலும் படு வேகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.
அந்த நாட்டுக் கால்பந்து அணி மட்டுமல்லாமல் பல்வேறு பிரிவினரும் இந்தக் கால்பந்துப் போட்டியை வைத்து செம லாபம் பார்க்கத் தயாராகி வருகின்றனராம்.

விபச்சார அழகிகளின் இலக்கு
விபச்சார அழகிகள்தான் கால்பந்து போட்டியை வைத்து பெரும் பணம் பார்க்க மும்முரமாக உள்ளனர்.லட்சக்கணக்கானோர் போட்டியைக் காண வருவார்கள் என்பதால் பிசினஸ் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அங்கு விபச்சாரம் அதிகாரப்பூர்வ தொழில்
பிரேசில் நாட்டில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலாகும். முறைப்படி பதிவு செய்து கொண்டு விபச்சாரத்தில் ஈடுபடலாம் என்பதால் பெருமளவிலான விபச்சாரப் பெண்கள் அங்கு உள்ளனர்.

மொழி ஒரு பிரச்சினை
செக்ஸ் தொழிலுக்கு மொழியெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை, 'பாடி லாங்குவேஜ்'தான் முக்கியம் என்று பொதுவாக கூறுவார்கள். ஆனால் பிரேசில் விபச்சார அழகிகளுக்கு மொழி ஒரு பிரச்சினையாகியுள்ளது. அவர்களுக்கு சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் பேச வராது என்பதால் இப்போது சிக்கலாகியுள்ளதாம்.

வேகமாக வேகமாக ஆங்கில போதனை
உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியைக் காண வரும் வெளிநாட்டினரைக் கவர்ந்து தொழில் செய்வதற்கு ஆங்கிலம் அவசியம் என்பதை பிரேசில் விபச்சார அழகிகள் உணர்ந்துள்ளனர். இதனால் தற்போது விபச்சாரத்திற்கான நேரம் போக ஹலோ, ஐ அம் ரெடி ஆர் யூ ரெடி என்ற பாணியில் ஆங்கிலம் கற்க ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனராம்.

கோச்சிங் கோர்ஸுக்கு நல்ல ஆதரவு
பிரேசில் நாட்டின் பெலோ ஹாரிஸான்டே நகரின் விபச்சார அழகிகள் சங்கத் தலைவி சிடா வியரியா கூறுகையில், எங்களிடம் தற்போது 20 பெண்கள் ஆங்கில பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளனர். விரைவில் 300 பேராக இது உயரும் என்று நம்புகிறோம். எங்களிடம் மொத்தம் 4000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்றார்.

எட்டு மாத பயிற்சி
மார்ச் மாதம் முதல் இந்த பயிற்சி வகுப்பு தொடங்குகிறதாம். எட்டு மாதங்களுக்கு இந்தப் பயிற்சி நீடிக்குமாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications