இந்திய ராணுவ வீரரின் துண்டிக்கப்பட்ட தலை எங்கே?
ரஜோரி/டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரரின் துண்டிக்கப்பட்ட தலையைத் திருப்பித் தருமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கேட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூன்ச் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 2 இந்திய ஜவான்கள் கொல்லப்பட்டனர். பின்னர் ஒரு வீரரின் தலையைத் துண்டித்து எடுத்துச் சென்று விட்டனர்.
இந்த வீரரின் தலை தற்போது எங்கே என்று தெரியவில்லை. இதுகுறித்து ரஜோரி பகுதி ராணுவ அதிகாரி ஜே.கே.திவாரி கூறுகையில், இரண்டு ராணுவ வீரர்களின் உடல்களையும் கொடூரமாக சிதைத்துள்ளனர் பாகிஸ்தான் வீரர்கள். அதில் ஒருவருடையை தலையை துண்டித்து விட்டனர். துண்டிக்கப்பட்ட தலை எங்கே என்று தெரியவில்லை. இதுகுறித்து தேடி வருகிறோம். பாகிஸ்தான் வீரர்கள் தலையை எடுத்துச் சென்று விட்டதாக தெரிகிறது என்றார்.
தலை துண்டிக்கப்பட்ட வீரரின் பெயர் சுதாகர் சிங் ஆகும். இவரும் லேன்ஸ் நாயக் ஹேம்ராஜ் என்பவரும்தான் கொல்லப்பட்டவர்கள். துண்டிக்கப்பட்ட தலையை ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் தரப்புக்கு இந்திய ராணுவத்திடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications