சென்னையில் கடனை திருப்பி கேட்டதால் பெண் கொலை: தம்பதி கைது
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பெண் கொலை, தொடர்பாக கட்டிடத்தொழில் செய்யும் தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணை மயிலை பாலாஜி தெருவை சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி விஜயா (50). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று காலை விஜயா சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகம் அருகே சாலை ஓர புதர் பகுதியில் பிணமாக கிடந்தார். சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் சென்று பிணத்தை மீட்டனர்.
கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து பேசப்பட்டிருந்த தொலைபேசி அழைப்பிலிருந்து அந்த பெண்ணைக் கொலை செய்த கட்டுமானத் தொழிலாளர்களான ரவி, புஷ்பா தம்பதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
விஜயாவிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்த அவர்களால் நீண்ட காலமாக கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. பணத்தை திரும்ப கேட்ட, விஜயாவைக் தனியிடத்திற்கு வரவழைத்து, இரும்பு ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிவித்தனர். மேலும் கொலை செய்த போது விஜயாவின் உடலில் இருந்து அவர்கள் கொள்ளையடித்த தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications