கணவரை மிரட்ட திருடர்களை அனுப்பிய மனைவி.. போட்டுத் தள்ளிய கணவர்!
பிட்ஸ்பர்க்: தனது கணவரை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்காக, சில திருடர்களை அனுப்பி வைத்தார் மனைவி. ஆனால் கணவரோ, திருடனை போட்டுத் தள்ளி விட்டார். இப்போது அந்த மனைவியையும், அவரது கள்ளக்காதலரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில்தான் இந்தக் கூத்து. அந்தக் கதையைப் படியுங்கள்...
பிட்ஸ்பர்க்கில் வசித்து வருபவர் சார்மைன் டய்ஜெரான். 28 வயதான இவருக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. ஆனால் கணவர் மீது அதிருப்தியுற்ற அவர், 22 வயதேயான மாட் பார்க்கர் என்பவரை பிடித்தார். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் கோபமடைந்த சார்மைனின் கணவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.
ஆனால் தானும், தனது மனைவியும் இணைந்து வாங்கிய வீட்டை விட்டு அவர் வெளியேறவில்லை. இதனால் கோபமடைந்தார் சார்மைன். தனது கணவரை வீட்டை விட்டு விரட்ட அவர் திட்டமிட்டார். இதற்காக ஒரு திருட்டுக் கும்பலை ஏற்பாடு செய்தார்.
அவர்களும் போலியான துப்பாக்கி மற்றும் நிஜக் கத்தியுடன் வீடு புகுந்தனர். அங்கிருந்து சார்மைனின் கணவரை உடனே வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று கூறி மிரட்டினர். ஆனால் சற்றும் பயப்படாத சார்மைனின் கணவர், ராபர்ட் லின்ட்சே என்ற திருடன் வைத்திருந்த கத்தியைப் பறித்து அதே வேகத்தில் ராபர்ட்டின் கழுத்தில் ஒரே போடாக போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ராபர்ட் துடிதுடித்துச் செத்தார்.
இதைப் பார்த்த திருடர்கள் பயந்து போய் வீட்டை விட்டு ஓடி விட்டனர். அதன் பின்னர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார் சார்மைனின் கணவர். போலீஸார் விரைந்து வந்து ராபர்ட்டின் உடலை மீட்டனர். விசாரணையில் சார்மைன்தான் இவர்களை ஏவி விட்டது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சார்மைன், அவரது கள்ளக்காதலர் பார்க்கர், பார்க்கரின் தம்பி சார்லஸ், ஜிம்மி என்பவர் ஆகியோரைக் கைது செய்தனர். தற்காப்புக்காக கொலை செய்ததால் சார்மைனின் கணவர் மீது வழக்குப் போட முடியாது என்று போலீஸார் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications