டி.எஸ்.பி வெள்ளத்துரைக்கு எதிராக திருவாரூர் கோர்ட் வாரண்ட்!...
திருவாரூர்: மானாமதுரை டி.எஸ்.பி. வெள்ளத்துரை மற்றும் 4 பேர்களுக்கு எதிராக திருவாரூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘மாட்டு' ரவி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அதில், ‘‘வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்த நான், தினமும் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வந்தேன். அப்போது வெள்ளைத்துரை தலைமையில் வந்த போலீஸ் குழு ஒன்று, என்னைத் தூக்கிச் சென்று என்கவுன்டரில் கொல்ல முயன்றது.
இந்தத் தகவல் அறிந்த எனது வழக்கறிஞர் ஊடகங்களுக்கு தகவல் சொன்னதோடு, காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் தந்தி மூலம் தகவல் அனுப்பினார். அதனை அடுத்து என்கவுன்டர் திட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், எனது காலை உடைத்ததோடு, கும்பகோணத்தில் ஒருவரிடம் 200 ரூபாய் பிக் பாக்கெட் அடிக்க முயன்றதாக என் மீது பொய் வழக்குப் போட்டனர்'' என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை திருவாரூர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இவ்வழக்கில் நேற்று ஆஜராகுமாறு வெள்ளத்துரை உள்ளிட்டவர்களுக்கு திருவாரூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சார்லஸ் நெப்போலியன் என்ற இன்ஸ்பெக்டர் மட்டும் ஆஜர் ஆனார். வெள்ளைத்துரை மற்றும் நான்கு போலீஸார் ஆஜராகவில்லை. அதனை அடுத்து இவர்கள் ஐந்து பேருக்கும் திருவாரூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications