அய்யப்[பன் கோவிலில் நாளை மகரவிளக்கு சிறப்பு பூஜை
குமுளி: சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை மகர விளக்கு சிறப்பு பூஜை நடைபெற இருக்கிறது.
அய்யப்பன் கோவிலில் கடந்த மாதம் 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது. பின்னர் கடந்த 30-ந்தேதி மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. 31-ந்தேதி முதல் அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. சபரிமலை கோவில் நடை திறந்தது முதலே பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
மகர விளக்கு பூஜை நாளை நடைபெறுகிறது. இதனால் சபரிமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். மகரவிளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். இதற்காக திருவாபரணங்கள் பெட்டி பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.
திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்ட பிறகு மாலை 6.30 மணி அளவில் சபரிமலை அய்யப்பனுக்கு தீபாராதனை நடத்தப்படும். அதே நேரத்தில் பொன்னம்பலமேட்டில் 3 முறை மகர ஜோதி தரிசனம் தெரியும்.
மகர ஜோதியை தரிசிப்பதற்காக வந்துள்ள பக்தர்கள் கடந்த 2 நாட்களாக மகரஜோதியை பார்க்க புல்மேட்டில் குடில்கள் அமைத்து தங்கி உள்ளனர். கடந்த 2011 ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கை தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது புல்மேட்டில்தான் 102 பேர் நெரிசலில் உயிர் இழந்தனர். இதனால் சன்னிதானம் பம்பை, புல்மேடு உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications