உலகின் அதிக வயதான ஜப்பான் மூதாட்டி மரணம்
டோக்கியோ: உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமை பெற்ற ஜப்பான் பாட்டி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 115.
உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த டினா மான்ஃப்ரெடினி 115 வயதான இவர் கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி மரணமடைந்தார்.
இதனையடுத்து, உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமைக்கு உரியவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த கோட்டோ ஒக்குபோ (115 வயது) என்பவர் கருதப்பட்டார்.
24.12.1897-ல் பிறந்த இவர் கிழக்கு ஜப்பானில் உள்ள கவாசாக்கி நகரில் மகனுடன் வாழ்ந்து வந்தார். கடந்த 27 நாட்களாக கோட்டோ ஒக்குபோதான் உலகின் வயதான பெண்மணி என்ற பெருமையை பெற்றிருந்தார். இந்தநிலையில் சில நாட்களாக காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், கவாசாக்கியில் உள்ள மருத்துவமனையில் திங்கட்கிழமை உயிரிழந்தார். இதனை இவரது பேத்தி தெரிவித்துள்ளார்.
இவருக்குப்பின் உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமை, மத்திய ஜப்பானில் உள்ள கியோட்டோ பகுதியில் வாழ்ந்து வரும் ஜிரோமன் கிமுரா (115 வயது) என்பவரை சென்றடைந்துள்ளது. இவர் கோட்டோ ஒக்குபோவை விட சில மாதங்கள்தான் வயது குறைவானர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications