எல்லையில் பதற்றம்- பாஜக தலைவர்களுடன் சிவசங்கர் மேனன் சந்திப்பு

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஜனவரி 6-ந் தேதி தொடர்ச்சியாக அத்துமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்களைக் கோரமாக கொலை செய்து அவர்களின் தலையைத் துண்டித்தது பாகிஸ்தான் ராணுவம். அதில் ஹேமராஜ் என்ற ராணுவ வீரரின் துண்டித்த தலையை தூக்கிச் சென்றுள்ளது பாகிஸ்தான். மேலும் இந்திய நிலைகள் மீது தொடர்ச்சியாக அந்த நாடு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருவதால் எல்லையில் போர் மேகம் சூழ்ந்திருக்கிறது.
இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் இது தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் ,பாகிஸ்தானை கண்டிக்காமல் இருப்பதாக பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருதது. இந்தக் கண்டனத்துக்குப் பின்னர் பாஜக மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜை நேற்று தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன்சிங், எல்லை பதற்றம் குறித்து எதிர்க்கட்சிகளுடனும் கலந்து ஆலோசிக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். இதேபோல் எதிர்க்கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டோம் என்றும் உறுதியளித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் இன்று பாஜக மூத்த தலைவர்களான அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். சுஷ்மா ஸ்வராஜின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் என்று ராணுவ தலைமை தளபதி பிக்ரம்சிங் கூறியிருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications