குமரியில் திமுக ஆர்ப்பாட்டம்- பொதுக்கூட்டம் ரத்து- அரசு காரணமா? அழகிரி காரணமா?

சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் ஜனவரி 19-ந் தேதியன்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை பராமரிக்கப்படாததைக் கண்டித்து திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு டெண்டர் கோரிவிட்டதாகக் கூறி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்பார் என்று கூறப்பட்டது. இதற்கும் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைதான் என்று கூறியிருக்கிறது திமுக. அனேகமாக திமுகவின் வரலாற்றில் எதிர்க்கட்சி அரசாங்கம் 'செயல்படுகிற' அரசாங்கம் என்பதை ஒப்புக் கொண்டது இந்தக் காலம்தான் என்று எண்ண வைக்கலாம். ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்!
ஸ்டாலின்தான் அடுத்த திமுக தலைவர் என்பது உறுதியாகிவிட்டது. ஸ்டாலினையே வழிமொழியப் போவதாக திமுக தலைவர் கருணாநிதியும் அறிவித்துவிட்டார் இதனால் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி செம கடுப்பில் இருக்கிறார். ஸ்டாலின் -அழகிரி மோதலானது இப்போது கருணாநிதி- அழகிரி மோதலாக வெடித்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள், வேண்டுமென்றே பிரச்சனையைக் கிளப்பினால் ரொம்பவுமே வெட்கக் கேடாகிவிடுமே என்று திமுக தலைமையிடம் ஸ்டாலின் தரப்பு கூறியதாம். இதனால் என்ன செய்வது என்ற குழப்பத்தில்தான் தமிழக அரசுக்கு நல்ல சர்ட்டிபிகேட் கொடுத்து சொந்த கட்சி நிகழ்ச்சிகளையே ரத்து செய்திருக்கிறதாம் திமுக!
திமுகவு அனுபவிக்கும் காலக்கொடுமையன்றோ?
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications