ஊழலில் நம்பர் 1 அமெரிக்காதான்… சொல்கிறார் ஜாக்கிசான்

சீனாவில் ஊழல் அதிகமாக உள்ளது' என்று அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியானது. சீன பிரதமர் வென் ஜியாபோ உள்பட பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர் என்றும் பரபரப்பாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதற்கு ஹாங்காங்கை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீன டிவியில் பேட்டியளித்த ஜாக்கிசான், சீனாவை பற்றி சீன மக்கள் விமர்சிக்கலாம். வீட்டில் நான்கு சுவர்களுக்குள் இருக்கும் போது நாட்டை பற்றி சீனர்கள் விமர்சித்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
வெளிநாட்டினரிடம் சொந்த நாட்டை பற்றி சீனர்கள் விமர்சனம் செய்யக் கூடாது. வெளிநாட்டினரிடம் பேசும் போது, 'எங்கள் நாடுதான் மிகவும் பெஸ்ட்' என்று சொல்லுங்கள். நம் நாட்டை பற்றி நாமே பெருமையாக பேசாவிட்டால், யார் பேசுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதே சர்வதேச நாடுகளின் வழக்கமாக உள்ளது. இது பல ஆண்டுகளாக நீடிக்கிறது. சீனாவில் ஊழல் பிரச்னை இருக்கிறது என்றால், அது மற்ற நாடுகளிலும்தான் உள்ளது. இன்னும் சொல்ல போனால், ஊழலில் நம்பர் 1 நாடு அமெரிக்காதான். அங்கிருந்துதான் ஊழலே தொடங்கியது என்று ஒரே போடாக போட்டுள்ளார் ஜாக்கிசான்.












Click it and Unblock the Notifications