12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வளர்ப்புத் தந்தை கைது
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே 12 வயது பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப் படுத்திய வளர்ப்புத் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
திலீப் படேல் என்ற 35 வயதான குற்றவாளி சிறுமியை கொலை செய்துவிடுவதாக மிரட்டியே உறவில் ஈடுபட்டு கொடுமை செய்துள்ளான். இது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி 8ம் வகுப்பு படித்து வருகிறார். வளர்ப்புத் தந்தையின் மீதுள்ள பயத்தினால் அவன் செய்த கொடுமைகளை வெளியே சொல்லாமல் இருந்த அந்த சிறுமி ஒருநாள் அவன் வெளியே போயிருந்த போது தனது தாயிடம் நடந்ததை கூறி அழுதிருக்கிறாள்.
இதனைத் தொடர்ந்து தனது கணவனை கைது செய்யக் கோரி மகளுடன் அம்பாசாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து கலம்னா பகுதியில் இரண்டாவது மனைவியிடன் வசித்து வந்த படேலை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மைனர் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
படேல் மீது புகார் கொடுத்துள்ள மைனர் பெண்ணின் தாயார் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவனை விட்டுவிட்டு படேலை இரண்டாதாக திருமணம் செய்து கொண்டார். மகள் முறை என்றும் பாராமல் தனது குழந்தையிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது கண்டு பொறுக்காமல் தற்போது கணவனுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். தற்போது படேல் மீது சிறுவர்களுக்கு எதிரான வன் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications