எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் தியாகிகளா? பலிகடாக்களா?: ராஜ்தாக்கரே உளறல்
மும்பை: பாகிஸ்தானால் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் தொடர்பாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே வெளியிட்டிருக்கும் கருத்தால் கடும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்கள் இருவரை படுகொலை செய்து தலையைத் துண்டித்த சம்பவம் நாட்டையே உறைய வைத்திருக்கிறது.
இந்த நிலையில் ராஜ்தாக்கரே, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் பதற்றமான சூழ்நிலையானது, நாட்டு மக்கள் சந்தித்து வரும் பல்வேறு கொந்தளிப்பான மனநிலையில் இருந்து திருப்பி விடுவதற்காகச் செய்யப்பட்டுள்ள நாடகமாக இருக்கலாம்.
எல்லையில் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் இருவர் உண்மையில் தியாகிகளா? அல்லது இந்தியா- பாகிஸ்தான் அரசியலுக்காக பலிகடா ஆக்கப்பட்டவர்களா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
அவரது இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன.
ஹேம்ராஜ் குடும்பத்துக்கு ராணுவ தளபதி ஆறுதல்
இதனிடையே ராணுவ தளபதி பிக்ரம் சிங் தனது மனைவி சுர்ஜித் கவுருடன் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள கெய்ரார் கிராமத்திற்கு கொல்லப்பட்ட வீரர்களின் ஒருவரான ஹேம்ராஜின் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ராணுவ மரபுகளின்படி ஹேம்ராஜின் குடும்பத்திற்கு தேவையான அனைத்தையும் ராணுவம் செய்யும் என்றார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications