அகதிகள் முகாம் பெண்களிடம் கியூ பிராஞ்ச் போலீஸ் அத்துமீறல்: சிபிசிஐடி விசாரணை கோரும் சீமான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்களை கியூ பிராஞ்ச் போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்து, சாதாரண முகாம்களில் உள்ள தங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதிக்கக் கோரி ஈழத்தமிழ் சொந்தங்கள் 9 பேர் 24 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முகாம்களில் வாழும் பெண்களை புணர்ச்சிக்கு அழைப்பது, அவர்கள் எதிர்க்கும்போது, உங்கள் அண்ணன், தம்பிகளை சிறப்பு முகாம்களில் அடைத்து விடுவோம் என்று மிரட்டுவது என்று கியூ பிரிவினரின் அராஜக நடவடிக்கைகள் இருக்கின்றன. இதுபோன்ற காரணத்தினால்தான் நாங்கள் கடலில் செத்தாலும் பரவாயில்லை என்று ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தப்பி செல்கிறோம் என்று நம் சொந்தங்கள் கூறுவதை கேட்க வருத்தமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.

இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி பல போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அவ்வப்போது 4 பேர், 5 பேர் என்று விடுதலை செய்யப்படுகிறார்கள். அடுத்த சில நாட்களிலேயே மேலும் சில ஈழத்தமிழ் மக்களை, குறிப்பாக இளையோரை பிடித்துக் கொண்டு வந்து சிறப்பு முகாம்களில் அடைத்து விடுகின்றனர்.

எனவே தமிழக முதல்வர் மனிதாபிமான நோக்கோடு இதில் தலையிட்டு, செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

அயல் நாட்டவர் சட்டத்தினை ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு எதிராக எப்படி கியூ பிரிவு தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி அறிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் வாழ்ந்துவரும் நம் சொந்தங்களுக்கு வீடு கட்டித் தருவது உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை நிறைவேற்றும் முதல்வர், கியூ பிரிவினரின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இதற்கு விடிவு பிறக்க வில்லையெனில், கடுமையான ஒரு போராட்டத்தில் குதிப்பதைத் தவிர நாம் தமிழர் கட்சிக்கு வேறு வழியில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்."என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+