எம்.ஜி.ஆரின் 96வது பிறந்தநாள்: ரசிகர்கள், தொண்டர்களுக்கு மோடி வாழ்த்து

தமிழக முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் 96வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தமிழக முன்னாள் முதல்வரும், தமிழர்களின் எவர்கிரீன் ஹீரோவுமான திரு. எம்.ஜி.ஆரின் 96வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
வடமாநிலத்து தொழில் அதிபர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மோடி விமானம் மூலம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தாஜ் ஹோட்டலுக்கு கிளம்பினார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கும் அவர் திருமண விழாவுக்கு செல்கிறார். இன்று மாலை 7 மணிக்கு அவர் விமானம் மூலம் குஜராத் செல்கிறார்.
எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்த ஜெ.:
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் உள்ள டானிங்டன் சந்திப்பில் 7.5 அடி உயரத்தில் 500 கிலோ எடை கொண்ட வெண்கலச் சிலையை முதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
இந்த சிலை திறப்பு விழாவையொட்டி டானிங்டன் பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. அங்கே வந்த ஜெயலலிதாவுக்கு படுகர், தோடர், கோத்தர் இன மக்கள் தங்களின் பாரம்பரிய நடனங்களை ஆடி அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் பொது மக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று அவரை வரவேற்றனர்.
சிலையை திறந்து வைத்த அவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் சிறப்பு மலரை வெளியிட்டார்.
இது தவிர டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு அதிமுக நாடாளுமன்றக் குழு துணை தலைவரும், கழக மாநிலங்களவை குழுத் தலைவருமான டாக்டர் வா. மைத்ரேயன், கழக மக்கள் அவை குழு கொறடா ஓ.எஸ். மணியன், கழக மாநிலங்கள் அவை குழுச் செயலாளர் ஆ. இளவரசன் மற்றும் திருப்பூர் சி. சிவசாமி, எம்.பி. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications