ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!
அகமதாபாத்: அன்னிய செலாவணி சட்டத்தில் கைதாகி சிறை சென்ற டாக்டர் ஒருவர், அங்கேயே படித்து 31 பட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் டாக்டர் பானு படேல். கடந்த 2004ல் அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு (பெரா) சட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு அகமதாபாத் நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2005ல் தீர்ப்பளித்தது.இதையடுத்து சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
டாக்டருக்கு படித்தவர் என்பதால் சிறையில் உள்ள மருந்தகத்தில் இவருக்கு வேலை தரப்பட்டது. அதன்படி கைதிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். பின்னர் சிறையில் உள்ள நூலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.அப்போது, டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்த கைதிகளுக்கு உதவுவதற்காக கடிதங்களை எழுதினார்.
இதை தொடர்ந்து ஆர்வத்தில் அஞ்சல் வழி பட்டப்படிப்பில் சேர்ந்தார். குறுகிய காலத்தில் படிப்பை முடித்தவர், உடனடியாக அடுத்த படிப்பில் சேர்ந்தார். இப்படியே, அடுத்தடுத்து, பி.காம், எம்.காம், எம்.எஸ்சி மற்றும் பல்வேறு முதுநிலை பட்டயப் படிப்புகளை முடித்தார்.
சிறையில் இருந்து 2011ம் டிசம்பரில் விடுதலை ஆனபோது மொத்தம் 31 பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை முடித்திருந்தார். சிறையில் இருந்தபடி அதிக பட்டங்களை பெற்றவர் என்பதால் சாதனை புத்தகங்களில் பானு படேலின் பெயர் இடம் பெற்றுள்ளது.விடுதலைக்கு பிறகு அவர் திறந்தவெளி பல்கலைக்கழக ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இப்போது, குஜராத்தில் உள்ள சிறைகளில் இயங்கும் 26 பல்கலைக்கழக மையங்களின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் அவரை ஆசிரியராக நியமிக்க திறந்தவெளி பல்கலைக்கழகம் உறுதி அளித்துள்ளது.
ஜெயிலில் இருந்து 31 பட்டங்களைப் பெற்ற அவருடைய சாதனை 2013ம் ஆண்டின் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications