மும்பை: 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஸ்கூல் பஸ் கண்டக்டர் கைது
மும்பை: மும்பையில் எல்.கே.ஜி மாணவியை ஸ்கூல் பஸ்சில் பலாத்காரம் செய்த கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை ஜுகு பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் நர்சரி வகுப்புகள் முடிந்ததும், 12 நர்சரி மாணவிகளை ஏற்றிக் கொண்டு ஒரு ஸ்கூல் பஸ் புறப்பட்டது. விலே பார்லே பகுதியைச் சேர்ந்த ரமேஷ்ராஜ்புத் (35) என்பவன் கண்டக்டராக இருந்தான்.
அந்தேரி பகுதியில் ஒவ்வொரு மாணவியாக இறக்கி விடப்பட்ட பின்பு கடைசியாக 4 வயது மாணவி மட்டும் தனியாக இருந்தாள். அப்போது கண்டக்டர் ரமேஷ்ராஜ்புத், தனியாக இருந்த மாணவியை மிரட்டி பஸ்சின் கடைசி இருக்கைக்கு இழுத்து சென்றான். அங்கு மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளான். பிறகு அவன் மாணவியை மிரட்டி பின்னர் வீட்டில் இறக்கி விட்டான். பயந்து போன மாணவி இதுபற்றி அன்று வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.
மறுநாள் பள்ளிக்கு வந்த மாணவி பயந்தவாறு அமர்ந்திருந்தாள். இதனைக் கண்ட ஆசிரியை அவளிடம் விசாரித்த போதுதான் கண்டக்டர் செய்த கொடூரத்தை சிறுமி விவரித்தாள். உடனே அந்த ஆசிரியை சிறுமியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்தார். அந்தேரி போலீசார் கண்டக்டர் ரமேஷை உடனடியாக கைது செய்தனர். அவன் ஜாமீனில் வெளியில் வரமுடியாதபடி 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும் பள்ளி வாகனங்களில் மாணவிக்கு உதவியாக பெண் உதவியாளர் யாரும் வரவில்லை என்பதால் அது குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பள்ளி பஸ்சுக்கு வழகங்கப்பட்ட அனுமதியையும் போலீசார் ரத்து செய்துள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications