ஸ்ரீவில்லிபுத்தூர்.. பள்ளிக்கு சென்ற ஆசிரியை மாயம்: ஆசிரியையை தாக்கிய கடற்படை வீரர்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உண்டு உறைவிடப் பள்ளிக்கு வேலைக்குச் சென்ற பட்டதாரி ஆசிரியையை மாயமாகிவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களுக்கு என உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் நத்தம்பட்டி கீழூரைச் சேர்ந்த காமாட்சி என்பவரின் மகள் காஞ்சனா தேவி ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
கடந்த 12ம் சனிக்கிழமை பள்ளிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் மீனா நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இன்னொரு ஆசிரியை மீது தாக்குதல்-கடற்படை வீரர் கைது:
இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியையை செங்கலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த கடற்படை வீரரை போலீஸார் கைது செய்தனர்.
கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராணி (45) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் மகள் பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் (22). தற்போது கொச்சியில் கடற்படை வீரராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியை புஷ்பராணி, வெள்ளிக்கிழமை மாலை வேலை முடிந்து வந்து கொண்டிருந்தபோது, திருஞானசம்பந்தம், ஆசிரியையின் மகள் குறித்து தகாத வார்த்தைகள் பேசியாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், செங்கலைக் கொண்டு திருஞானசம்பந்தம் ஆசிரியை புஷ்பராணியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் புஷ்பராணி காயமடைந்தார். இதனையடுத்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடற்படை வீரர் திருஞானசம்பந்தத்தை கைது செய்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications