ராகுல் துணைத் தலைவரானதால் எங்களுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது.. பாஜக
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டிருப்பதால் பாஜகவுக்கு எந்தப் பாதிப்பும் வராது, சவாலும் கிடையாது என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷானவாஸ் ஹுசேன் கூறுகையில், ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் நம்பர் டூ தலைவராக ஆக்கியிருப்பது எங்களைப் பாதிக்காது.
ராகுல் காந்தியின் நியமனம், பாஜகவுக்கு சவால் என்றும் கூற முடியாது. அவரது நியமனத்தால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. மேலும் அவரது நியமனம் ஆச்சரியமான விஷயமும் கிடையாது. அவர் ஏற்கனவே சோனியா காந்திக்கு அடுத்த தலைவராகத்தான் இருந்து வந்தார். மேலும் நேரு - இந்திரா குடும்பத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர்தான் நம்பர் ஒன்னாகவும், நம்பர் டூவாகவும் காங்கிரஸில் வர முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்...
ராகுல் காந்தியால் காங்கிரஸுக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை. அவரால் பாஜகவை எந்த வகையிலும் பாதிப்படையச் செய்ய முடியாது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அவர் வந்தாலும் கூட எங்களுக்குப் பாதிப்பு கிடையாது. காரணம், காங்கிரஸுக்கு எதிர்காலமே கிடையாது என்றார் அவர்.


Click it and Unblock the Notifications
