சண்டிகர் அநியாயம்... பழிக்குப் பழி வாங்க பலாத்காரம் செய்யப்பட்ட பெண்
சண்டிகர்: சண்டிகரைச் சேர்நத 24 வயதுப் பெண்ணை கடத்திய இரண்டு பேர் கொண்ட கும்பல் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்து காரிலிருந்து வீசி விட்டுச் சென்று விட்டதாம். தன்னைப் பழிக்குப் பழி வாங்கவே இப்படி பலாத்காரம் செய்து விட்டனர் என்று அந்தப் பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பதிண்டா போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அப்பெண். அதில், சண்டிகர் செக்டார் 43 பகுதியில் உள்ள பஸ் நிலையத்திலிருந்து தன்னை வெள்ளிக்கிழமை 2 ஆண்களும், 2 பெண்களும் சேர்ந்து கடத்திச் சென்றனர்.
பின்னர் ஓடும் காரிலேயே வைத்து அந்த இரண்டு ஆண்களும் சேர்ந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பின்னர் என்னை பதிண்டாவில் உள்ள சங்கத் மண்டி என்ற இடத்தில் மாலையில் காரிலிருந்து வீசி விட்டுப் போய் விட்டனர் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருவதாக சிறப்பு எஸ்.பி. ரவிசரண் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண் மீது கடந்த ஆண்டு கொலை முயற்சி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதில் கைது செய்யப்பட்ட அவர் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். தன்னைப் பழிக்குப் பழிவாங்கவே இப்படி நடத்தியுள்ளனர் என்றும் அவர் கூறுகிறார்.
இப்பெண் ஒரு நர்ஸ் ஆவார். பதிண்டாவில் இவர் முன்பு பணியாற்றியுள்ளார். சுனில் என்ற திருமணமானவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சுனிலின் மனைவிக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனது கணவர் மற்றும் நர்ஸ் மீது அவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்தனர் போலீஸார்.
தற்போது இப்பெண் கொடுத்துள்ள பாலியல் பலாத்காரப் புகார் தொடர்பாக பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications