பாஜக தலைவர் பதவி- மகேஷ் ஜெத்மலானியும் போட்டி?

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் நிதின் கத்காரியையே மீண்டும் நிறுத்த வேண்டும் என்பது அக்கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிலைப்பாடு. ஆனால் மூத்த பாஜக தலைவரான எல்.கே.அத்வானியோ சுஷ்மா ஸ்வராஜையோ அல்லது ரவிசங்கர் பிரசாத்தையோ கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று முனைப்பு காட்டினார். கத்காரி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதால் அவரை மீண்டும் தலைவராக்கக் கூடாது என்பது அத்வானியின் நிலைப்பாடு.
இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு அத்வானியை ஒருவழியாக சமாதானப்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து வரும் 23-ந் தேதி கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் கத்காரி வேட்புமனுத்தாக்கல் செய்ய இருக்கிறார். இந்நிலையில் கத்காரிக்கு எதிராக போட்டியிடப் போவதாக மூத்த பாஜக தலைவர் ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் கத்காரி, பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகியாக வேண்டும் என்பதை வலியுறுத்தி கட்சிப் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தவர் மகேஷ் ஜெத்மலானி. இவரது தந்தை ஜெத்மலானியும் கத்காரிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர். இந்த நிலையில் மகேஷ் ஜெத்மலானி பாஜக தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications