இலங்கையில் அழிக்கப்படும் தமிழைக் காப்பாற்றுங்கள்... பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
இலங்கையில் தமிழ் மொழி, தமிழ்க் கலாசாரம், ஹிந்து மதம் மற்றும் தமிழர் பண்பாடுகளை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்ப் பகுதிகளையும், தமிழர்களையும் அழிக்கும் முயற்சியிலும் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழ்க் கிராமங்களின் பெயர்களுக்கு சிங்களப் பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. தமிழர்கள் வாழும் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. ஹிந்து மதக் கோயில்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளைக்கூட இலங்கை அரசு செய்யவில்லை. தமிழர் பகுதிகளில் ராணுவ முகாம்கள் உள்ளன. இது போன்ற நிலையால் இலங்கையில் தமிழர்கள் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
இலங்கை அரசு இதுவரை 89 தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியுள்ளது. 367 ஹிந்து மதக் கோயில்களை இடித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 148 சிறிய ராணுவ முகாமும், 13 முக்கிய ராணுவ முகாம்கள் உள்ளன. இதனால் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா பல்வேறு மொழி, மதங்களைக் கொண்டு உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறது. அந்த அடிப்படையில் இலங்கை அரசின் அராஜகத்தை தடுத்து நிறுத்தும் தார்மிக கடமை இந்தியாவுக்கு உள்ளது.
எனவே, உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு, தமிழ்க் கலாசாரம் அழிக்கப்படுவதைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இதேபோன்ற கடிதம் ஒன்றை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அவர் அனுப்பியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications