ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட காரைக்கால் வினோதிநிக்கு பிரதமர் ரூ. 3 லட்சம் நிதியுதவி

காரைக்கால் நகரைச் சேர்ந்த வினோதினி. சென்னை சைதாப்பேட்டையில் தங்கி இருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ் தனது காதலை ஏற்க மறுத்த வினோதினி மீது கடந்த நவம்பர் மாதம் ஆசிட் வீசினார். இதில் வினோதினியின் முகம் மற்றும் உடலில் பல பகுதிகள் கருகிப்போனது. முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வினோதினியின் மீது நேரடியாக ஆசிட் வீசப்பட்டதால் அவரது இரு கண்களும் எரிந்து பார்வை பறிபோய் விட்டது. தொடையில் உள்ள சதையை வெட்டி எடுத்து முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர். கண்ணையும் சதையால் தைத்து மூடி உள்ளனர். வருங்காலத்தில் கண்ணின் அடையாளமாக செயற்கை கண்கள் பெருத்தலாம் என்று கூறப்படுகிறது.கண்கள் இழந்து, எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் வாழப்போராடிக் கொண்டிருக்கும் இந்த இளம்பெண்ணுக்கு உதவி கரம் நீட்டும்படி வினோதினியின் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், வினோதினியின் மருத்து சிகிச்சைச் செலவுக்காக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார். நிதிஉதவிக்கான காசோலையை மத்திய அமைச்சர் நாராயணசாமி நாளை வழங்குகிறார். ஏற்கனவே வினோதினியின் சிகிச்சைக்காக புதுவை முதல்வர் ரங்கசாமி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications