திருமண மோசடிப் பெண் ஷானாஸுக்கு பெண் குழந்தை பிறந்தது

கேரளாவைச் சேர்ந்தவர் ஷானாஸ். இவர் பல ஆண்களை மோசடியாக மணந்து பணம், பொருளை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. நூற்றுக்கணக்கான ஆண்களை இவர் மோசடி செய்து விட்டதாக செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் புளியந்தோப்பு பிரசன்னா உள்பட நான்கு பேரை மட்டுமே இவர் மணந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்தன.
நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர் பெங்களூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார் ஷானாஸ். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் அவருக்குத் தற்போது குழந்தை பிறந்துள்ளது. அழகான பெண் குழந்தையை அவர் பெற்றுள்ளார். பிரசவத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஷானாஸ் கூறுகையில், இப்போது எனக்கு தங்குவதற்கு இடம் கூட இல்லை. எனது தோழியின் வீட்டில்தான் தங்கியுள்ளேன். எனது கணவர் பிரசன்னாதான், இந்தக் குழந்தைக்குத் தந்தை. அவர் என்னை ஏற்க வேண்டும். இதுதொடர்பாக கமிஷனரிடமும் புகார் கொடுத்துள்ளேன்.
நான் 50 பேரைத் திருமணம் செய்ததாக கூறிய தகவலை அவர் காரணமாக கூறி என்னை ஏற்க மறுக்கிறார். ஆனால் அது உண்மையல்ல, நான் 50 பேரை மணக்கவில்லை. இது சத்தியம். இதை அவருக்குப் புரிய வைத்து அவருடன் சேர்ந்து வாழ்வேன். அது முடியாவிட்டால் நானும், எனது குழந்தையும் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார் சோகத்துடன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications