கேரளாவில் 9ம் வகுப்பு மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்த காதலன்
திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் 9ம் வகுப்பு மாணவி காரில் கடத்தி கற்பழிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
கோழிக்கோடு புதிய பாலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிறுமி ஒருவர் 9ம் வகுப்பு படித்து வந்தார். தினமும் பள்ளி முடிந்ததும் அவரது பெற்றோர் வந்து அவரை அழைத்துச் செல்வது வழக்கும். கடந்த 17ம் தேதி மாணவியை அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் பள்ளி வாசலின் முன்பு காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் மாணவி வரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் பள்ளிக்குள் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் மாணவி வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தங்கள் மகள் மாயமானது குறித்து அவர்கள் கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீஸ் கமிஷனர் பாஜன் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாணவியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதற்கிடையே அன்று இரவு 9 மணி அளவில் மாணவியின் வீடு அருகே ஒரு இன்னோவா கார் வந்து நின்றது. காரில் இருந்து ஒரு கும்பல் அந்த மாணவியை ரோட்டில் தள்ளிவிட்டது. அவர் கீழே விழுந்ததும் மின்னல் வேகத்தில் அந்த கார் அங்கிருந்து சென்றுவிட்டது. போலீசார் மாணவியை மீட்டு விசாரித்தனர்.
அப்போது அவரை அவரது காதலன் மிதுன் உள்பட 4 பேர் காரில் கடத்திச் சென்று கற்பழித்தது தெரிய வந்தது.
அவரின் வாக்குமூலத்தின் பேரில் போலீசார் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். காதலன் மிதுனை உடனடியாக கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மாந்தோட்டத்தைச் சேர்ந்த நிசாம், நான்னாலம் பகுதியைச் சேர்ந்த அலி அக்பர், செம்மாங்காட்டைச் சேர்ந்த யூசுப் சுலைமான் ஆகியோரை கைது செய்தனர். கைதான 4 பேர் மீதும் கடத்தல், கற்பழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications