தங்கம் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்.. இறக்குமதி வரியை உயர்த்தியது அரசு

இந்தியாவில்தான் தங்கம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காகவும், தங்கத்தின் இறக்குமதிக்காகவும் இந்தியா அதிக அளவில் அன்னிய செலாவணியை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
கடந்த 2011-2012-ம் நிதி ஆண்டில் இந்தியா வெளிநாட்டில் இருந்து ரூ.3.10 லட்சம் கோடி அளவுக்கு தங்கத்தை இறக்குமதி செய்தது. 2012-2013-ம் நிதி ஆண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரை ரூ.2.9 லட்சம் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது.
தங்கம் மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதிக்கு இதுவரை 4 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அன்னிய செலாவணியை கருத்தில் கொண்டு, தங்கம், பிளாட்டினம் ஆகியவற்றின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நேற்று திடீரென்று 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தியது. இந்த வரி உயர்வு உடனடியான அமலுக்கு வந்தது.இந்த தகவலை பொருளாதார விவகார துறையின் செயலாளர் அரவிந்த் மாயாராம் தெரிவித்தார்.
இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் தங்கம் இறக்குமதி கணிசமாக குறையும் என்றும் அப்போது அவர் கூறினார். ஆனால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும். ஏற்கனவே தங்கம் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது மேலும் ஒரு அதிர்ச்சிச் செய்தியாக வந்து சேர்ந்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications