கேரளாவில் ஓடும் பேருந்தில் பெண் கண்டக்டரை மானபங்கம் செய்த கூலித் தொழிலாளி
திருவனந்தபுரம்: கேரளாவில் இரவு நேரத்தில் ஓடும் பேருந்தில் பெண் கண்டக்டர் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் இருந்து தூக்கமூலைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு பேருந்து பயணிகளுடன் புறப்பட்டது. அந்த பேருந்தில் பெண் கண்டக்டர் பணியில் இருந்தார். பேருந்து புறப்பட்டு கல்லியூர், வெள்ளையன் கோவில் பகுதியில் சென்றபோது பயணிகள் பலரும் இறங்கிவிட்டனர். ஒரு சிலர் மட்டுமே பேருந்தில் இருந்தனர். அப்போது பேருந்தில் இருந்த வாலிபர் ஒருவர் திடீர் என்று எழுந்து கண்டக்டர் அருகே சென்றார்.
பின்னர் அவரது கையைப் பிடித்து இழுத்து மானபங்கப்படுத்த முயன்றார். வாலிபரின் செயலால் அதிர்ச்சி அடைந்த பெண் கண்டக்டர் அலறினார். அவரது சத்தம் கேட்டு டிரைவர் பேருந்தை நிறுத்தினார். மற்ற பயணிகள் அந்த வாலிபரை நோக்கிச் சென்றதும் அவர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினார்.
அவரை டிரைவரும், பிற பயணிகளும் விரட்டிச் சென்றனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் இதைப் பார்த்து மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று அந்த வாலிபரை பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் சுரேஷ் குமார் என்பதும், அவர் கூலித் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் பாப்பனாங்கோடு போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications