வால்பாறை பள்ளியில் தலைமை ஆசிரியர்-ஆசிரியை நிர்வாணமாக உல்லாசம்: இன்டர்நெட்டில் வீடியோ
கோவை: வால்பாறையில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் வேறொரு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன் நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாசப் படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 150 மாணவ, மாணவியர் படிக்கும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், வேறு ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியையும் நிர்வாணமாக இருக்கும் ஆபாச வீடியோ இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளன.
இதைப் பார்த்து அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பேரதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஆபாச வீடியோவில் இருக்கும் தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் வால்பாறை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்த பிறகே சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து பொது மக்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் முனியசாமி கூறுகையில்,
சோலையாறு எஸ்டேட் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உதயன்(49) வேறு ஒரு ஊராட்சி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியையுடன் வகுப்பறையில் உல்லாசமாக இருக்கும் படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்க்கையில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க மாட்டோம் என்றனர்.
இது குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் காளிமுத்து கூறுகையில், சம்பந்தப்பட்ட இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவர்களை சஸ்பெண்ட் செய்வோம் என்றார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications