தமிழக பாஜவுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: பொன். ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜகவிற்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி பாஜக மாநில தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து மாநில துணை தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், கோட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மாநில துணை தலைவர்களாக எச்.ராஜா, தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட எட்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மோகன்ராஜுலு (அமைப்பு), சரவணபெருமாள், ரமேஷ் ஆகியோர் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகரும், செயலாளர்களாக 9 பேரும், செயற்குழு உறுப்பினர்களாக 60 பேரும், சிறப்பு அழைப்பாளர்களாக 13 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாநில நிர்வாகிகள் 10 பேர் மாவட்டங்களை உள்ளடக்கிய கோட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் நியமனம் பூர்த்தியடைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+