ஜப்பானில் பாம்பாட்டம் ஆடிய மகனை கடித்துக் கொன்ற தந்தை
டோக்கியோ: ஜப்பானில் தன்னை ஒரு பாம்பு ஆட்கொண்டதாகக் கூறி ஆட்டம் போட்ட வாலிபரை அவரது தந்தை கடித்துக் கொன்றார்.
ஜப்பானில் உள்ள ஒகாசாகி நகரைச் சேர்ந்தவர் கட்சுமி நகாயா. அவரது மகன் டகுயா நகாயா(23). ஆஞ்சோ நகரில் வசித்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது பெற்றோரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தான் ஒரு பாம்பு என்று கூறி பாம்பு போல் ஆடியதுடன் வெறிப்பிடித்தது போன்று நடந்து கொண்டார்.
இதைப் பார்த்து அவரது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தனது மகனை ஆட்கொண்ட பாம்பை விரட்ட கட்சுமி டகுயாவை அடித்தும், கடித்தும் உள்ளார். இந்த கூத்து காலையில் இருந்து மாலை வரை நடந்துள்ளது. தந்தை அடித்து, கடித்து, தலையால் முட்டியதில் படுகாயம் அடைந்த டகுயாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் விசாரணைக்கு முன்பு கட்சுமியின் மனநிலை குறித்து மருத்துவப் பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications