சென்னை: 70 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு சைக்கிளில் தப்பிய திருடன் சிக்கினான்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் வீடியோ கடைக்காரரின் வீட்டின் பீரோவில் இருந்த 70 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்ற திருடனை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயப்பேட்டை வி.எம். தெருவில் வசித்து வருபவர் கணபதி (வயது 28). இவர் அண்ணாசாலையில் குணா வீடியோஸ்' என்ற பெயரில் வீடியோ கடை வைத்துள்ளார். பொது நிகழ்ச்சிகளுக்கு வீடியோ கவரேஜ் செய்து வருகிறார். பாரிமுனை காளிகாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 10 நாட்களாக கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கும் பணியில் கணபதி ஈடுபட்டார்.
கணபதியின் மனைவி ஜெயந்தி வடபழனியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்ததால் வீட்டில் யாரும் இல்லை. புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் வீட்டுக்கு திரும்பிய கணபதி அதிர்ச்சியடைந்தார். அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் இருந்த ரூ. 1 லட்சம் பணம், 70 பவுன் நகை ஆகியவை காணாமல் போயிருந்தது.
வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் மிகவும் துணிச்சலாக வீட்டை உடைத்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
தப்பியோடிய கொள்ளையன்
இதனிடையே கணபதி வீட்டுக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவரது வீட்டின் பால்கனியில் இருந்து வாலிபர் ஒருவர் குதித்து ஓடியதாக பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து கணபதியும், அந்த பகுதியை சேர்ந்த சிலரும் அந்த வாலிபரை தேடினர். அப்போது வாலிபர் ஒருவர் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றார். அவரை கணபதியும் அக்கம் பக்கத்தினரும் விரட்டிச் சென்றனர். திடீரென்று சைக்கிள் செயின் அறுந்து அந்த வாலிபர் கீழே விழுந்தார். அவரை கணபதியும் மற்றவர்களும் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவன் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவன் என்று தெரியவந்தது. அவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரிடமிருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அவனது கைரேகைகளை பதிவு செய்துள்ள போலீசார் இவனை வைத்து மற்ற கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கணபதியின் வீட்டில் கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ. 16 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications