'காவி' தீவிரவாதம்: ஷிண்டே கருத்து.. கி.வீரமணி Vs ராம.கோபாலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் காவி தீவிரவாதத்தை பரப்புவதற்காக தீவிரவாத முகாம்களை நடத்துவதாக தெரிய வந்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே குற்றம் சாட்டினார். இந்த கருத்துக்கு ஆதரவாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியிருப்பதை எதிர்த்து பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

ஷிண்டே உள்துறை அமைச்சர். ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்? ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா?. ஷிண்டே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை அமைச்சராக இருப்பது என்பது உயர் சாதிவர்க்கத்திற்கு உறுத்தலாகத் தானே இருக்கும். அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும். சுசில்குமார் ஷிண்டே காவி தீவிரவாதம் குறித்து கூறியதில் தவறு என்ன? ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்! இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

ராம. கோபாலன் எதிர்ப்பு

இதனிடையே காங்கிரஸ்காரர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பற்றி விமர்சனம் செய்ய எந்த தகுதியும் இல்லை என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேசத்திற்காக தன்னையே அர்ப்பணிக்கும் தொண்டர்களை கொண்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இப்படிப்பட்ட உன்னதமான இயக்கத்தை பற்றி உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே முஸ்லிம், கிறிஸ்தவ வாக்குகளுக்காக அவதூறாக பேசுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. பல லட்சம் ஆயிரம் கோடி ஊழல் புகாரில் சிக்கி நாட்டையே நாசமாக்கிய காங்கிரஸ்காரர்கள் ஆர்.எஸ்.எஸ். ஐ பற்றி விமர்சனம் செய்ய எந்த தகுதியும் கிடையாது.

காவி தீவிரவாதம் என்பது காங்கிரஸ் கொண்டிருக்கிருக்கும் மனநோய். மனநோயாளியின் பிதற்றல் இது. எல்லாத் துறைகளிலும் தோற்றுப்போய்விட்ட காங்கிரஸ் தனது தோல்வியை மறைப்பதற்காக அவ்வப்போது மிரட்டுவது வழக்கம். ஷிண்டே செய்திருப்பது அதையே தான். இவ்வாறு ராம.கோபாலன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+