அணு ஆயுதப் போருக்குத் தயாராகுங்கள்... காஷ்மீரில் 'டென்ஷன்' விளம்பரம்!
ஸ்ரீநகர்: அணு ஆயுதப் போருக்குத் தயாராகுங்கள். அதற்கேற்ற வகையில் வீடுகளில் பங்கர்களை அமையுங்கள் என்று ஒரு செய்தித் தாளில் வெளியான விளம்பரத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விளம்பரத்திற்கு முதல்வர் உமர் அப்துல்லாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். முட்டாள்தனமான யோசனை என்று அவர் இதை வர்ணித்துள்ளார்.
இத்தனைக்கும் உமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசின் பேரிடர் தவிர்ப்புப் பிரிவின் சார்பில்தான் இந்த விளம்பரம் காஷ்மீர் நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. தற்போது இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் பதட்டமான சூழல், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விளம்பரத்தை பேரிடர் தவிர்ப்புப் பிரிவு வெளியிட்டுள்ளது.
அதில் அணு ஆயுத யுத்தத்தை எதிர்நோக்கி மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.அப்படி நேரிட்டால் எப்படி தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும், பங்கர்கள், பாதுகாப்பு நடவடிக்கைளை அமைப்பது எப்படி என்பது உள்ளிட்ட யோசனைகளை அந்த விளம்பரத்தில் தெரிவித்துள்ளனர்.
இது காஷ்மீர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கருத்து தெரிவிக்கையில் இது முட்டாள்தனமான யோசனை என்று கூறியுள்ளார்.
அந்த விளம்பரத்தில், ஒரு கழிப்பறை அளவிலான தடுப்பு அறைகளை வீட்டுக்குள்ளேயே அமைக்கலாம். அதில் ஒரு குடும்பத்தினர் 14 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும். அது பாதுகாப்பானதும் கூட என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விளம்பரம் குறித்து மாநில பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், இது முன்னெச்சரிக்கை நடவடிக்கைதானே ஒழிய வேறு எதற்கும் இதில் தொடர்பு இல்லை என்று விளக்கியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications