குண்டானவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகம்… ஆய்வில் தகவல்
லண்டன்: உடல் குண்டாக இருப்பவர்கள் கார் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பது அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கார் விபத்துகளில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் இது குறித்து இங்கிலாந்தில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அதிக உடல் எடையுடன் கூடிய குண்டான மனிதர்கள் 80 சதவீதம் பேர் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் உடல் குண்டான பெண்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் கலிபோர்னியா பல்கலைக்கழகம், மேற்கு வெர்ஜினியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் இணைந்து இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 1996 முதல் 2008 வரை நடைபெற்ற 3400 விபத்துக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 30 முதல் 35 வயதுவரை உடைய நார்மல் எடை உடையவர்கள் 20 சதவிகிதம் பேர் அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். அதேசமயம் குண்டான உடலமைப்பு கொண்டவர்கள் 80 சதவிகிதம் பேர் கார் விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
விபத்து ஏற்படும் போது டிரைவரின் இருக்கையில் இருக்கும் குண்டானவரின் தசைகளால் உடல்களின் உட்புறத்தில் மோதுகிறது. இதனால் இடுப்பு எலும்பு மற்றும் வயிற்றின் அடிப்பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவின் மருத்து இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications