டெல்லி அருகே +2 மாணவி கற்பழித்து, தலை துண்டித்து கொலை

Subscribe to Oneindia Tamil

பரிதாபாத்: ஹரியானா மாநிலத்தில் 16 வயது மாணவி கற்பழிக்கப்பட்டு, தலை துண்டித்து கொல்லப்பட்டுள்ளார்.

ஹிரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்த 16 வயது மாணவி நேற்று பள்ளி முடிந்து பிற்பகல் 3 மணி அளவில் டியூஷனுக்கு சென்றார். ஆனால் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் பலனில்லை. உடனே இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில் காந்தி காலனியில் அந்த மாணவி தலை துண்டிக்கப்பட்டு பிணமாகக் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். அவரது உடலைக் கைபற்றிய போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த மாணவியை கடந்த சில நாட்களாக 9 வயது சிறுவனின் தந்தையான சோனு (30) என்பவர் பின்தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவர் அம்மாணவியுடன் அருகில் உள்ள சிம்ரன் விடுதிக்கு சென்று அங்குள்ள அறை எண் 1ல் 15 முதல் 20 நிமிடங்கள் இருந்துள்ளார்.

அதன் பிறகு அவர் மட்டும் வெளியே செல்வதை விடுதி உரிமையாளர் பார்த்துவிட்டு அந்த அறைக்கு சென்றபோது மாணவி தலை துண்டிக்கப்பட்டு கிடந்துள்ளார். அவரது வயிற்றிலும் கத்தி குத்துப்பட்ட காயங்கள் இருந்துள்ளன. இதையடுத்து சோனுவை போலீசார் கைது செய்ததாகக் கூறப்படுகிறது. மாணவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+