ஊழலுக்குக் காரணமே எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினராம்: சமூகவியாளர் ஆசிஷ் நந்தியின் ‘கண்டுபிடிப்பு’

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ‘இலக்கிய திருவிழா'வில் பேசிய ஆசிஷ் நந்தி, நாட்டின் பல ஊழல்களுக்குக் காரணம் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்தான். இவர்களோடு பழங்குடி இன மக்களும் இப்போது இணைந்திருக்கின்றனர். தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒடுக்கப்பட்ட பிரிவினருமே ஊழலுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
ஆசிஷ் நந்தியின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரஷித் ஆல்வி இது குறித்து கூறுகையில், இத்தகைய கருத்துகள் ஏற்புடையது அல்ல என்றார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நஜ்மா ஹெப்துல்லாவும் ஆசிஷ் நந்தியின் கருத்தை நிராகரித்திருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்த தலித் எழுத்தாளர் சந்திரபான் பிரசாத், ஆசிஷ் நந்தி கூறுவது போல் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே ஊழல்களில் ஈடுபடுகின்றனர் என்பதற்கு என்ன புள்ளி விவரம் அவரிடம் இருக்கிறது? எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் போகிற போக்கில் இப்படி பேசக் கூடாது. அவர் தனது அறிவுத் தன்மையை தவறாகப் பயன்படுத்துகிறார். மற்றவர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது போன்றதுதான் இது என்று சாடியுள்ளார்.
ஆனாலும் ஆசிஷ் நந்தியோ தமது கருத்தில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையையும் எதிர்கொள்ளவும் தயார் என்றும் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications