வங்கதேசத்தில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தீ: 7 பெண்கள் உடல் கருகி பலி
டாக்கா: வங்க தேசத்தில் உள்ள ஆயத்த ஆடைகள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பெண்கள் உடல் கருகி பலியாகினர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 பேர் பலியாகினர். இந்நிலையில் டாக்காவில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டாக்காவின் புறநகர் பகுதியான முஹம்மத்பூரில் ஸ்மார்ட் பேக்டரி என்ற பெயரில் பேண்ட் மற்றும் சட்டைகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அந்த இரண்டு அடுக்குமாடி தொழிற்சாலையில் நேற்று திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த 7 பெண் ஊழியர்கள் உடல் கருகி பலியாகினர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை அணைத்தனர். இரண்டாவது மாடியில் கருகிய நிலையில் கிடந்த 7 பெண்களின் உடல்களை மீட்டனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
வங்கதேசத்தில் 4,000க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications