வேஸ்ட் ஷிண்டே.. நள்ளிரவில் காங். தொல்லை.. சோனியா மன்னிப்பு: உண்மைகளை உடைக்கும் வர்மா!

டெல்லியில் ஓடும் பேருந்தில் கடந்த டிசம்பர் 16-ந் தேதியன்று மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் பலியானார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து பலாத்கார குற்றங்கள் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவது குறித்து பரிந்துரைகளை அளிக்க நீதிபதி வர்மா தலைமையில் ஒரு கமிஷனை மத்திய அரசு அமைத்தது. இந்த கமிஷன் சில நாட்களுக்கு முன்பாக தமது பரிந்துரைகளை அரசிடம் அளித்தது.
இந்நிலையில் நீதிபதி வர்மா, தமது கமிஷன் பற்றிய கருத்துகளை தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்று அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அந்தப் பேட்டியில் கூறியிருந்ததன் முக்கிய அம்சங்கள்:
ஷிண்டே வேஸ்ட்
உள்துறை அமைச்சராக இருக்கும் ஷிண்டேவுக்குத்தான் இத்தகைய விவகாரங்கள் தொடர்பாக பொறுப்பிருக்கிறது. ஆனால் பலாத்கார குற்றங்கள் தொடர்பான இத்தகைய ஒரு கமிஷன் அமைக்கப்படுகிறது என்பது பற்றியும் இதுதொடர்பாக பிரதமர் சார்பாக தாம் பேசுவதாகவும் கூறியவர் 'நிதி' அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம்தான். அவரும் கூட தமிழ்நாட்டின் சிவகங்கையில் இருந்துதான் பேசினார். இன்னும் சொல்லப் போனால் இதுவரை என்னிடம் ஷிண்டே ஒருவார்த்தை கூட பேசவில்லை.
காங்கிரஸின் தொல்லை- சோனியா மன்னிப்பு
கமிஷன் பரிந்துரைகள் தாக்கல் செயப்படும் நாளில் நள்ளிரவில் சிலர் என் வீட்டுக் கதவைத் தட்டினர். அப்போது தூங்கிக் கொண்டிருந்தேன். வந்த நபர்கள் காங்கிரஸ் கட்சியின் பரிந்துரைகள் என சிலவற்றைக் கொடுத்தனர். ஆனால் இதை சோனியா காந்தி எப்படி தெரிந்து கொண்டார் எனத் தெரியவில்லை. எனக்கு போன் செய்து தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட சங்கடங்களுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார். அவரிடமும் இனிமேல் இதுபோல் நடந்து கொள்ள வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.
தூக்கு தண்டனை இல்லை.. ஏன்?
பலாத்கார குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதை மூத்த பெண்ணியவாதிகளே ஒப்புக் கொள்ளவில்லை. இது தொடர்பாக ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இப்பொழுதும் கூட பெண்ணியவாதிகள் பலரும் தூக்கு தண்டனைக்கு எதிராக இருந்து வருகின்றனர். இதனால் 20 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்டது.
அலுவலக வசதி கூட தரவில்லை..
வர்மா கமிஷனை அமைத்த மத்திய அரசு ஒருவகையான வேண்டா வெறுப்பு போக்கையே கடைபிடித்தது என்று சொல்லலாம். அரசின் விக்யான் பவனில் கமிஷனுக்காக சில அறைகளைக் கேட்டிருந்தோம். கமிஷனின் உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கு அரசு வாகனங்களைக் கேட்டிருந்தோம். ஆனால் அப்படி எந்த வசதியையும் மத்திய அரசு செய்து தரவில்லை என்று கூறியிருக்கிறார் நீதிபதி வர்மா.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications