கரூர் அருகே தலித் மக்கள் செருப்பணிந்து சென்ற போராட்டம்
கரூர்: கரூர் அருகே தலித் மக்கள் செருப்பு அணிந்து சென்ற போராட்டம் நடைபெற்றது.
கரூர் அருகே உள்ள கொக்கம்பட்டியில் தலித் மக்கள் செருப்பணிந்து செல்லும் போராட்டம் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
கரூர் மாவட்டம் கொக்கம்பட்டியில் உள்ள தலித் மக்கள் ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில் செருப்பு அணிந்து செல்லக் கூடாது என தலித் மக்கள் மீது தீண்டாமைக் கொடுமைகளை நடத்தி வந்துள்ளனர்.
இதை எதிர்த்து தலித் மக்கள் செருப்பு அணிந்து செல்லும் போராட்டத்தை வெற்றிகரமாக்கியுள்ளோம். இந்த வெற்றி கொக்கம்பட்டிக்கோ, கரூருக்கோ கிடைத்த வெற்றியல்ல. இப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் தலித் மக்கள் செருப்பு அணிந்து செல்ல முடியாத நிலைமை உள்ளது என்றால் தமிழகத்தை, இந்தியாவை ஆட்சி செய்யும், ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
எங்கெல்லாம் தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகிறதோ அங்கெல்லாம் போராட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications