மதுரை: குறுக்கே வந்த வேன்.. தட்டிக்கேட்ட பஸ் டிரைவர், கண்டக்டருக்கு அடி
மதுரை: மதுரையில் சாலையில் போய்க் கொண்டிருந்த அரசு பஸ்சின் குறுக்கே திடீரென ஒரு வேன் கிராஸ் செய்ததால் அதை டிரைவரும், கண்டக்டரும் தட்டிக் கேட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் சரமாரியாக வேனில் வந்தவர்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பானது.
திருவாதவூரில் இருந்து பெரியார் பஸ்நிலையத்திற்கு திங்கள்கிழமை இரவு ஒரு டவுன் பஸ் போய்க் கொண்டிருந்தது. அப்போது உத்தங்குடி பகுதியில் பஸ் வந்தபோது, பஸ்சின் முன்பு திடீரென ஒரு வேன் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வேன் மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரவைர் ஓரம் கட்டி நிறுத்தினார்.
அதன் பின்னர் டிரைவர் முரளிதரன், கண்டக்டர் சிராஜ், பின்னால் வந்த மற்றொரு அரசு பஸ் டிரைவர் பாண்டிகுமார் ஆகியோர் வேன் டிரைவரிடம் இப்படியா போவது என்று கேட்டுள்ளனர். ஆனால் அதைக் கேட்டு கோபமடைந்த வேன் டிரைவரும், வேனில் இருந்த சிலரும் சேர்ந்து தாக்குதலில் குதித்தனர்.
இதில் முரளிதரன், சிராஜ், பாண்டிகுமார் மூவரும் காயமடைந்தனர். இந்த திடீர் தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டனர். அனைவரும் ஒத்தகடைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications