மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது: ஐ.ஜ.தளம் திட்டவட்டம்; உமா பாரதியும் எதிர்ப்பு
டெல்லி: பாஜக கூட்டணி சார்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும், இதை ஐக்கிய ஜனதா தளம் ஏற்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
இந்தக் கருத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று ஏற்கனவே ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் பிகார் முதல்வருமான நிதிஷ்குமார் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இந் நிலையில், யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஐக்கிய ஜனதா தளம் சவால் விட்டுள்ளது.
நரேந்திர மோடியை ஏற்க வேண்டும் என்று கூறும் சின்ஹாவின் பாஜக பிகாரில் எங்கள் கட்சியுடன் அமைத்துள்ள கூட்டணியில் இருந்து விலகத் தயாரா?. பிகாரில் எங்களுக்குத் தந்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள சின்ஹா தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய ஜனதா தள செய்தித் தொடர்பாளரான தேவேஷ் சந்திர தாகூர்.
அதே போல அந்தக் கட்சியின் இன்னொரு தலைவரான அலி அன்வர் கூறுகையில், மோடி எதிர்ப்பு என்பது எங்களது கட்சியின் கொள்கை. யஷ்வந்த் சின்ஹா ஒன்றும் ஹெட்மாஸ்டரும் அல்ல, நாங்கள் அவரது மாணவர்களும் அல்ல என்றார்.
பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய மூன்று கட்சிகள் ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா மற்றும் அகாலி தளம் ஆகியவை. இதில் சிவசேனையும் மோடியை ஏற்க முடியாது என்று நேரடியாகக் கூறாமல், சுஷ்மா சுவராஜைத் தான் பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என்று கூறி வருகிறது.
அகாலி தளம் தனது கருத்தை இதுவரை தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறது. இந் நிலையில் ஐக்கிய ஜனதா தளம் மோடியை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளது.
மோடிக்கு உமா பாரதியும் எதிர்ப்பு?:
இந் நிலையில் பிரபலமாக இருப்பது ஒன்றே பாஜகவின் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யாது என்று அக் கட்சியின் இன்னொரு தலைவரான உமா பாரதி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், பிரபலத்தன்மை ஒன்று மட்டுமே பாஜகவின் பிரதமர் வேட்பாளரைத் தீர்மானிக்காது. பிரபலமாக இல்லாவிட்டாலும், ஏராளமான திறமைசாலி தலைவர்கள் பாஜகவில் உள்ளனர். அவர்களும் பிரதமர் வேட்பாளர்களுக்குத் தகுதியானவர்களே என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications