உங்களுக்கு 75 வயசாயிருச்சா?... அப்படீன்னா பாஜகவில் உங்களுக்கு டிக்கெட் கிடைக்காது!
டெல்லி: நரேந்திர மோடியை டெல்லியில் பெரிய வேலைக்கு அமர்த்துவதற்கு வசதியாக பல்வேறு முன்னேற்பாடுகளில் பாஜக இறங்கியுள்ளதாக தெரிகிறது. முதல் கட்டமாக 75 வயது மற்றும் அதற்கு மேல் வயது கொண்டவர்களுக்கு லோக்சபா தேர்தலில் டிக்கெட் தருவதில்லை என்ற முடிவை கட்சித் தலைமை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் தலைவரான நிதின் கத்காரிதான் இந்த யோசனையை முன்பு தெரிவித்திருந்தார். தற்போது இதை தற்போதைய தலைவர் ராஜ்நாத் சிங் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த திட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்.ஸும் தனது ஆதரவைத் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
படிப்படியாக வயதானவர்களை கட்சிப் பணியிலிருந்து அகற்றி ஓய்வு பெறச் செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நீண்ட காலமாக கூறி வருகிறது. இருப்பினும் தற்போது இந்த நடவடிக்கையை பாஜக திடீரென கையில் எடுத்திருப்பதற்கு நரேந்திரமோடியே காரணமாக இருக்க முடியும் என்று கருதப்படுகிறது.
அவருக்குப் போட்டியாக யாரும் கட்சியில் இருக்கக்கூடாது, அப்படிப்பட்ட நிலையை உருவாக்கினால்தான் அவரை டெல்லியில் உயரிய இடத்தில் அமர வைக்க முடியும் என்று கட்சித் தலைமை கருதுகிறது.
75 வயதுக்காரர்களுக்கு டிக்கெட் கிடையாது என்ற முடிவை அமல்படுத்தினால் அதனால் பாதிக்கப்படுவோர் பட்டியலில் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் முதலில் வருவார்கள்.
ஏற்கனவே மோடிக்கு ஆதரவாக யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் தேர்தல் டிக்கெட்டுக்கான வயது வரம்பை பாஜக நிர்ணயிக்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருப்பது விறுவிறுப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் புதிய பாணியில் செயல்படத் தயாராகி வரும் நிலையில் பாஜகவையும் புதுப்பித்தாக வேண்டிய நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. எனவே மிகவும் வயதானவர்களுக்கு டிக்கெட் தருவதில்லை என்ற முடிவை பாஜக தலைமை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்புடெல்லி வந்து ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து 2 மணிநேரம் பேசினார். நேற்று யஷ்வந்த் சின்ஹா, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். இந்த நிலையில் தற்போது வயதானவர்களுக்கு டிக்கெட் தருவதில்லை என்ற பாஜகவின் முடிவு குறித்த செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications