மேல்மலையனூரில் எட்டிப் பார்த்த பேய்!… குடிசைகள் எரிந்த மர்மம்!!
விழுப்புரம்: கொஞ்சம் காலமாக பேய், ஆவி பற்றி சம்பவங்களும், செய்திகளும் ஊடகங்களில் அடிபடாமல் இருந்தது. இப்போது விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் குடிசைகள் சில பற்றி எரியவே மீண்டும் பற்றிக்கொண்டது பேய் பற்றிய கட்டுக்கதை செய்திகள்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பேய் வந்து பார்த்ததாக அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர். கடந்த மாதம் பேய் வந்தபோது 5 வீடுகள் எரிந்ததாகவும், இப்போது மறுபடியும் பேய் ஊருக்குள் எட்டிப்பார்த்த காரணத்தால்தான் மேலும் 5 குடிசை வீடுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தன என்றும் பீதியோடு விவரிக்கின்றனர் ஊர்மக்கள்.
வீடுகளை பேய் பார்த்ததால் குடிசைகள் எரிந்ததாக கூறும் கிராம மக்கள், அதற்காக சிறப்பு பரிகார பூசை செய்யவும் தயாராகி வருகின்றனர். அச்சத்தோடு அவர்கள் விவரிக்கும் கதையைக் கொஞ்சம் படியுங்களேன்.

திடீரென தீப்பிடித்த குடிசை
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் குள்ளம்மாள். இவரது குடிசை வீடு, ஞாயிறு மதியம் 12 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறி தப்பினர். அப்பகுதி மக்கள் குடிசை வீட்டில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர்.

மர்ம தீ விபத்து
அப்போது திடீரென அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன், சுசிலா, தனபாக்கியம், புருஷோத்தமன் ஆகியோரது வீடுகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் தீப்பிடித்தன. மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முன்பு குடிசைகளின் கூரை முழுவதும் எரிந்து சேதமானது.

குடுகுடுப்பைக் காரர் சொல்லிட்டாரே!
இந்த தீவிபத்து பற்றி கூறிய குள்ளம்மாள், என்பவர் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் வந்து இந்தப் பகுதியில் 10 வீடுகள் தீப்பற்றி எரியும் என கூறினார். பேய் பார்த்ததால் தான் இது நடந்துள்ளது எனவும் குடுகுடுப்பைக்காரர் தெரிவித்தாகவும் பீதியோடு கூறினார். அவர் சொன்னது போல கடந்த மாதம் 5 வீடுகள் எரிந்தது. தற்போது 5 வீடுகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் தீப்பிடித்துள்ளது என்று கூறியுள்ளார் அந்த பெண்.

பரிகார பூஜை
அம்பேத்கார்நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும், இது பேயின் லீலைதான் என்கின்றனர். வீடுகள் திடீர் திடீர் என்று எரிவதால் பேய் பீதியை போக்கவும், சாந்தப்படுத்தவும் கோயிலில் பரிகார பூஜை நடத்த முடிவு செய்து உள்ளனர்.

குடுகுடுப்பைக்காரரை கூப்பிடுங்கப்பா
பிரேசிலில் நேற்று விடுதி ஒன்று தீப்பிடித்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த செய்தியினால் ஒரே பரபரப்பாக உள்ளது ஒருவேளை மேல்மலையனூர் பேய்தான் பிரேசில் பக்கமும் சென்றதோ தெரியவில்லை. குடுகுடுப்பைக்காரரை கொஞ்சம் கூப்பிட்டு விசாரிங்கப்பா!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications